• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இந்தியாவில் 5000 த்தை கடந்த கொரோனா தொற்று

ByA.Tamilselvan

Jun 8, 2022

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா தொற்று 5000 கடந்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படிப்படியாக குறைந்துவந்த கொரோனா தொற்று தற்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது.இந்தியா முழுவதும் 180 கோடிக்கு மேற்பட்டோர் க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5233 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,31,90282 ஆகவும், உயரிழந்தோர் எண்ணிக்கை 5,24,715 ஆகவும் அதிகரித்துள்ளது.28,857 பேர் தற்போதுசிகிச்சையில் உள்ளனர்.
3 ஆண்டுகள் கடந்த பின்பும் தொற்று குறையாமல் இருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை 100 தாண்டியுள்ளளது என்பது குறிப்பிடத்தக்கது.