• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று

Byமதி

Dec 4, 2021

தமிகத்தில் ஓமிக்ரான் வைரஸின் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் கொரோனா தாக்கம் சற்றே இருந்தாலும் தனி நபர் கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியுள்ளது.

இந்தநிலையில் நேற்று, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியில், சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றின் தன்மை குறித்து மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5 நாட்களில் அதன் முடிவுகள் வரும். ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றார்.