• Mon. Mar 27th, 2023

இந்தியாவுக்கு அஞ்சியதா சீனா?

Byமதி

Dec 4, 2021

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க இலங்கையுடன், சீனா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அந்த மின் உற்பத்தி திட்டத்தை சீன நிறுவனம் தற்போது இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம் அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் டெல்ப்ட், நாகதீபா மற்றும் அனல்தீவு என மூன்று தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் மின் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்க ஜனவரியில் இலங்கை அரசுடன், சீனாவின், ‘சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அந்த மின் உற்பத்தி திட்டத்தை சீன நிறுவனம் தற்போது ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள சீன துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்கும் திட்டத்தை, சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. மூன்றாம் தரப்பினரால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாலத்தீவிற்கு சொந்தமான 12 தீவுகளில், சூரிய மின் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்க, நவ., 29ம் தேதி அந்நாட்டு அரசுடன் சீன அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட டெல்ப்ட், நாகதீபா மற்றும் அனல்தீவு ஆகிய மூன்று தீவுகளும், தமிழகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா அறிவித்ததில் இருந்தே இந்திய இதற்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *