கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 20 பேர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வெள்ளி குளம் அதிமுக ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணன் (எ) கிட்டு தலைமையில் பிரதிநிதிகள் சிவசுப்பிரமணியன், கல்யாணி முருகன், இசக்கி, கணேசன் உட்பட 20க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கழகத்தில் இணைந்த அனைவருக்கும் தெற்கு மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி துரை, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரம், முன்னாள் பேரூர் செயலாளர் அல்லா பிச்சை, பேரூர் துணை செயலாளர் அம்பேத்குமார் ரவி, முன்னாள் பிரதிநிதி பாண்டியன், இணைச் செயலாளர் முருகன், கடையும் சுரேஷ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.