• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தலைநகரில் குறையும் கொரோனா!..

By

Aug 22, 2021

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அங்கு கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்று கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை அங்கு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,079 ஆக உள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 56 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,11,840 ஆக உயர்ந்துள்ளது. அங்கு தற்போது 398 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.