• Sat. Apr 20th, 2024

“போதை பொருள் ஒழிப்புக்கு ஒத்துழையுங்கள் நண்பர்களே” கூடலூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் வேண்டுகோள்……

இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அவைகளை ஒழிக்கவும், நல்லதொரு சமுதாயத்தையும், நாட்டையும் உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள்… கூடலூர்(DSP) காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் சமூக வலைத்தளங்கள் மூலம் உருக்கமாக வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நண்பர்களே….இன்று நமது நாடு சந்திக்கும் மிகப்பெரிய விபத்தாக இளம் தலைமுறைகளிடையே அதிகப்படியான போதைப் பொருள் உபயோகம் மாறியுள்ளது.

கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள்,மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை இந்த போதை பொருட்கள் புழக்கத்திற்கு எதிராக தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இந்த போதைப்பொருட்களை புழக்கத்தில் விடும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டணையையும் பெற்று தருகின்றனர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

மேலும் கஞ்சா, பிரவுன் சுகர், ஹாஷிஷ் ஆயில், ஹெராயின், MDMA , போன்ற போதைப்பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. இதற்கு எதிராக நாம் செயல் பட வேண்டும் என்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்த செயல்பாடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யும் செய்திகளை நாம் தினந்தோறும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் காண்கிறோம். நமது குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் இது போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்பது மட்டுமல்லாமல், தீய போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதன் மூலம் மகன் தாய் தந்தையை கொலை செய்வது கணவன் மனைவியை கொலை செய்வது மகள் தவறான பாதையில் செயல்பட்டு சமூக விரோதிகளிடம் சிக்கி சீரழிவது மனைவி கணவனுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபடுவது இளைய சமுதாயம் கொலை கொள்ளை கற்பழிப்பு நரபலி போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து போதைப் பொருளைப்பயன்படுத்துவது போன்ற நிகழ்வுகள் நமது வருங்கால சந்ததியினரின் இயல்பான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே பொதுமக்களாகிய நாம் நமது காவல் துறையினருடன் இணைந்து ஒன்று பட்டு செயல்பட வேண்டும், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். எனவே நாம் நமது காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளித்து போதைப் பொருள் உபயோகத்தை நமது நாட்டில் இருந்து அடியோடு ஒழிக்க ஒன்று படுவோம்….நாட்டைக் காப்போம்…..என தெரிவித்துள்ளார்.

மகேஷ்குமார், கூடலூர் டி.எஸ்.பி.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *