• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jun 17, 2022

உருளைக்கிழங்கு தேங்காய்பால் குழம்பு:

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு -5 பல், முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன். வறுத்து அரைக்க: பச்சை மிளகாய் – 4, பொட்டுக்கடலை – ஒருடேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். தாளிக்க: பட்டை – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக உதிர்த்துவையுங்கள்.பூண்டு, இஞ்சியை நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்குங்கள். இரண்டாவதுபாலில் வெங்காயம் இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே வேகவிடுங்கள். வெங்காயம் வெந்ததும், உருளைக்கிழங்கு சேருங்கள். பச்சை மிளகாய்,பொட்டுக்கடலை இரண்டையும் வறுத்து அரைத்துச் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பட்டை, கறிவேப்பிலை தாளித்து இறக்கி, முதல் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குங்கள்.