சிக்கன் நக்கட்ஸ்
தேவையான பொருள்கள் –
எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, முட்டை -1, மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மைதா மாவு – 4 மேஜைக்கரண்டி, பிரட் தூள் – 10 மேஜைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி அதன் மேல் மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். முட்டையை உடைத்து ஒரு பௌலில் கலக்கி வைக்கவும். மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பிரட் தூளை எடுத்து வைத்துக்கொள்ளவும். ஊறிய சிக்கன் துண்டுகளை மைதா மாவில் பிரட்டி பிறகு முட்டையில் டிப் பண்ணி இறுதியில் பிரட் தூளில் பிரட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். மீதமுள்ள எல்லா சிக்கன் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி. சிக்கன் நக்கட்ஸ்சுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறலாம்.
சமையல் குறிப்புகள்




