• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கைது… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

By

Aug 31, 2021 , ,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக அஸ்வின் குமார் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஷிவாங்கி, அஸ்வின் காம்பினேஷில் ஒளிபரப்பான எல்லா எபிசோட்களுமே தூள் கிளப்பியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வின் நடிப்பில் வெளியான ‘குட்டி பட்டாசு’ பாடல் யூ-டியூப்பில் டாப் வைரலானது.

தற்போது ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த நிறுவனத்துடன் மூன்று பட டீலில் கையெழுத்திட்டிருக்கிறார் அஸ்வின். டி.வி. நிகழ்ச்சிகள் மூலமாக ரசிகைகளின் உள்ளம் கொள்ளை கொண்டுள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ள போஸ்டர் ஒன்று ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளது.

பிரேக்கிங் நியூஸ்- பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக வெளியான போஸ்டரை பார்த்த அஸ்வினுக்கு ஒரு நிமிடம் பகீர் என்று ஆகிவிட்டது என பதிவிட்டு, ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.