• Wed. Jul 9th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

போதைப்பொருள் விவகாரம்.. பிரபல இயக்குநர் விசாரணைக்கு ஆஜர்

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேர் விசாரணை செய்யப்பட் டனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பல கோடி பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை தனியாக விசாரணை தொடங்கியது. இதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக சந்தேகித்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரித்து வருகிறது.

 

இந்நிலையில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை இப்போது சம்மன் அனுப்பி உள்ளது. நடிகைகள் ரகுல் பிரீத்தி சிங், ராணா, ரவிதேஜா இயக்குனர் புரி ஜெகநாத், நடிகை சார்மி, முமைத் கான் உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் இயக்குநர் புரி ஜெகநாத் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டிருந்தது. அதன்படி அவர் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.