• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என் நாடு என் தேசம் அறக்கட்டளையின் தொடரும் சேவை!

மக்கள் தொண்டில் பெரும்பணி செய்து வரும் என் நாடு என் தேசம் அறக்கட்டளை தனது அடுத்த சேவையாக, ஏழை மாணவனுக்கு உதவி செய்து வருகிறது..

காஞ்சிபுரம் மாவட்டம், கோவூரைச் சேர்ந்த மாணவன் சாய் ராம்.. வயது 13.. அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.. தனியார் மருத்துவமனையில் செய்த தவறான சிகிச்சை காரணமாக கை செயலிழந்து மிகுந்த சிரமப்பட்டு வந்தார்.. தந்தை இல்லாமல், தாய் பராமரிப்பில் வாழ்ந்து வரும் சாய்ராமின் குடும்பம் அவருக்கு மேல்சிகிச்சை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்..

இந்நிலையில், மாணவனின் நிலை அறிந்த அறக்கட்டளை நிறுவனர்களான பவித்ரா சிவலிங்கம் மற்றும் சிவலிங்கம் இருவரும் மாணவனுக்கு உதவ தாமாக முன்வந்தனர்.. இதனைத்தொடர்ந்து, மாணவன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது! மேலும், மாணவனின் மருத்துவ செலவுக்கு மாதம் ரூ.2000 ரூபாய் வழங்கப்போவதாகவும் அறக்கட்டளை நிறுவனர் பவித்ரா சிவலிங்கம் கூறியுள்ளார்!