மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் சார்பில் கடந்த 30ம் தேதி காலை 10 மணி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இதனால் பல்கலைக்கழக பதிவாளர் அறை முன்பு கைகளில் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இதில் பெண் பேராசிரியர்கள்
உட்பட 50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில் 2022 ம் வருடம் முதல் காலமுறை பதவி உயர்வை வலியுறுத்தி பதிவாளர், உயர்கல்வித் துறை செயலாளர், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் சுந்தரவல்லி உள்ளிட்டோரிடம் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தகுதியுடைய பலருக்கும் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளோம். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த தொடர் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினர் முத்தரப்பு பேச்சாற்றை நடத்தியதின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதற்காக கடிதத்தின் மூலம் உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது என முபா சங்க நிர்வாகிகள் கூறினர்.













; ?>)
; ?>)
; ?>)