• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்..,

BySeenu

Mar 23, 2026

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞர்ணி தேர்தல் பிரச்சார முன்கள பணியாளருடனான ஆலோசனை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் கோவை, நீலகிரி மாவட்ட மாவட்ட, மாநகர், ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் கோவை முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மண்டல பொருப்பாளர் செந்தில்பாலாஜி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இளைஞர் அணி நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறும் போது :

ஒரு வாரத்திற்கு முன் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை மாநாடு போல நடத்தினோம். மீண்டும் முக்கியமான நேரத்தில் குறிப்பாக தேர்தல் அறிவித்த பிறகு நிர்வாகி கூட்டம் நடத்துகிறோம். வரும் தேர்தலில் கழக அணி வெற்றி பெற வேண்டும். இளைஞர் அணி நிகழ்வில் கலந்து கொள்வது குடும்ப நிகழ்ச்சி கலந்து கொள்ளும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களத்தில் இளைஞர் அணி சென்று வாக்கு கேட்டோம். இந்த பிரச்சாரத்தால் 100 சதவீத வெற்றியை பெற்றோம். மீண்டும் கழக அணி களத்தில் இறங்கி சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். கோவையை யார் யாரோ கோட்டை என கூறுகிறார்கள். கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும். வீடு வீடாக சென்று இளைஞரணியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். பூத்துக்கு ஒரு இளைஞர் அணி அமைக்கபாளர் என அமைத்துள்ளோம்.

நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவே இந்த ஆலோசனை கூட்டம்.. கலைஞர் கூறியதை இளைஞர் அணி நிறைவேற்றித் தரவேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவிலேயே தினமும் மக்களை சந்தித்த முதல்வர் நமது முதல்வர் தான். இறுதி நேரத்தில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் நினைவு படுத்த வேண்டும். முதல்வர் பல்வேறு திட்டத்தை சொல்லி, அதனை செய்து காட்டியுள்ளார். காலை உணவு திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றார்.

தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.