• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு.இளம்பகவத் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி. ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஊராட்சிகள் சாந்தி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,ஜவஹர் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன்ரத்தினகுமார் கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த், வெங்கடசலபதி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.