• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி பள்ளம் மட்டும் தோண்டி கிடப்பில் போடபட்டுள்ள கட்டுமான வேலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வேலப்பர் கோவில் பகுதியில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு அரசு சார்பில் பலவகையான நலதிட்ட உதவிகள் வழங்கபட்டு வருகிறது.

இங்கு 31குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் முதலில் 14 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கபட்டது.மீதமுள்ள 17வீடுகளை கட்டி கொடுக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிபடையில் வீடுகள் கட்டுவதற்காக கடந்த மூன்றுமாதத்திற்கு முன்பாக பள்ளம் தோண்டபட்டது.பள்ளம் தோண்டபட்டதோடு கட்டுமான வேலைகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாலும் கிராம மக்கள் ஊராட்சி மன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் கட்டுமான பணியை முடித்து வீடு கட்டிதருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்/