• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அக்.28ல் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்

Byவிஷா

Oct 26, 2024

அக்டோபர் 28 அன்று திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் கட்சிகள் இப்போதே களப்பணிகளை தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளது. இதனால், இளைய தலைமுறையினர் வாக்கு விஜய்க்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால், தங்களது வாக்கு வங்கிகளை தக்க வைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் களமிறங்கி உள்ளன.
அதன்படி, ஆளுங்கட்சியான திமுக பல்வேறு முன்னேற்பாடுகளை கடந்த பல மாதங்களாகவே செய்து வருகிறது. திமுகவில் ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலுக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், மேலும், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர, திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்குவது, அதற்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அக்டோபர் 28-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.