• Mon. May 6th, 2024

தொண்டருக்கு அறிவாள் வெட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நேரில் ஆறுதல்

ByN.Ravi

Apr 9, 2024

இராஜபாளையம் அருகே, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய தமிழர் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரத்தின் போது, திமுக பிரதிநிதி மகன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். தட்டிக் கேட்ட அதிமுக தொண்டருக்கு அறிவாள் வெட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நேரில் ஆறுதல் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது .இந்த பகுதியில், அதிமுக கட்சி கூட்டணி சார்பில் புதிய தமிழக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
இவர், இராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர பிராச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் . இன்று இராஜபாளையம் அருகே அயன் கொல்ல கொண்டான் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அந்த பகுதியை சேர்ந்த குருசாமி (திமுக) பிரமுகர் மகன் சுரேஷ் , வேட்பாளர் கிருஷ்ணசாமியை காரை விட்டு கிழே இறங்கி பேசு என , ஒருமையில் போசி உள்ளார். இதை பார்த்த அப்பகுதிய சேர்ந்த சந்தரலிங்ம் என்பவர் ஏன் இப்படி செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டச் சென்ற பொழுது சுந்தரலிங்கத்தின் தம்பி ரவிச்சந்திரன் தடுக்க சென்ற பொழுது, அவருக்கு வலது கையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் மத்தியில், அருவாள் வெட்டு ஏற்பட்டது.
இரு கட்சிகளும் பதட்டத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, ரவிச்சந்திரனை அதிமுக கட்சி தொண்டர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, சேத்தூர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு ப்
பதிவு செய்து, தப்பி ஓடிய சுரேசை தேடி வருகின்றனர் .
மேலும், வெட்டுபட்ட ரவிச்சந்திரன் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு பொறுப்பில் உள்ளார். தன் கட்சித் தொண்டர் பிரச்சாரத்தின் போது வெட்டுப்பட்டடு அரசு மருத்துவமனையில் இருப்பது கேட்ட முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, நேராக அரசு மருத்து
வமனைக்கு சென்று அவரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
ஆளுங்கட்சியாக உள்ள திமுக தேர்தல் நேரத்தில் வன்முறையை கையில் எடுத்து வாக்குகளை கலைத்து விடலாம் என்ற நோக்கத்தில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *