மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரிக்கு சொந்தமாக மதுரையில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்திற்கு நடுவே பண்ணை வீடு உள்ளது. நேற்று இரவு முக அழகிரியின் இந்த பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர்.
பண்ணை வீட்டில் யாரோ பூட்டை உடைக்கும் சப்தம் கேட்டு, காவலாளி வீட்டினுள்ளே நுழைந்து பார்த்துள்ளனர்.காவலாளியை பார்த்ததும் வீட்டின் பூட்டை உடைந்து நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பியோடியுள்ளனர். தோட்டத்திற்கு நடுவே உள்ள பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் யார்? கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்திருந்தார்களா? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து பண்ணை வீட்டின் மேனேஜர் குட்டி சார்பில் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார், கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து தேடி வருகின்றனர்.