
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமையில், கருங்கல்லில் மணிப்பூர் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்ளாத மணிப்பூர் மாநில அரசையும், மணிப்பூர் மாநிலம் தீ பற்றி எரியும் நிலையில் மாநில மக்களின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்யாது தொடர்ந்து வெளி நாட்டு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து வாய் மூடி மெளனியாக இருப்பதை கண்டித்து, கருங்கல் சந்திப்பில் நடந்த ஆர்பட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களில். ஆண்கள், பெண்கள் மெழுகு வத்தி, மற்றும் தீ வெட்டி ஏந்தி நடத்திய ஆர்பாட்டத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று டெல்லியில் எதிர்கட்சிகள் ஒன்று பட்டு மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் எழுப்பும் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியாவின் தென் கோடி மக்களும் பாஜக அரசுக்கு எதிராக எழுப்பும் ஒலி,அதன் ஓசை இந்தியாவின் எட்டு திக்குகளிலும் தொடர்ந்து ஒலிக்க செய்வதின் மூலம் ஒன்றிய அரசில் இருந்து பாஜகவை அகற்றுவதே நமது தலையாய பணி இதன் மூலம், மீண்டும் இந்திய திரு நாடு ஜனநாயக பாதையில் பயணிக்க நாம் துணை நிற்போம் என பேசினார். கருங்கல் சந்திப்பில் காங்கிரஸ் ஆர்பாட்டத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால்சிங், ஆகியோர் உரையாற்றினார்கள்.
