காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாக்சனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்களுடன் சாலை மறியல் காவல்துறையுடன் தள்ளு முள்ளு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் ,குற்றவாளிளை கைது செய்ய கேட்டு காங்கிரசார் சாலை மறியல்,மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நுற்றுகனக்கானோர் சாலை மறியல், தள்ளுமுள்ளு வாக்குவாதம், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று எம்எல்ஏக்கள் உட்பட 200 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ஜான்சன் இவரது மனைவி திருவட்டார் பேரூராட்சி பத்தாவது வார்டு காங்கிரஸ் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 27 ஆம் தேதி ஜான்சரின் வீட்டு அருகே வந்த சிலர் ஜாக்சனை தொலைபேசியில் அழைத்துள்ளனர். வீட்டில் இருந்து வெளியே வந்த பொழுது ஜாக்சனை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
உயிர் ஆபத்தான நிலையில் அருகில் உள்ளவர் ஜாக்சனை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் அவரது வீட்டு அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் பிரின்ஸ் தாரகை கத்பட் உட்பட காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்பட்ட நிலை அமைத்து உத்தரவிட்டிருந்தார் .

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஜாக்சனை வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற விளாங்கன் முன் விரோதம் காரணமாக ஆறு பேரும் சேர்ந்து படுகொலை செய்ததாக தெரிய வந்தது ஏற்கனவே இந்த ராஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்தது படுகொலையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யது உண்மைகுற்றவாளிகளை காவல்துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் என கேட்டு கேட்டு இன்றும்(ஜூலை_29)மாலை திருவட்டாறு பேருந்து நிலையம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர் .
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் பிரின்ஸ் தாரகை கத்பட் உட்பட நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது .
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது போராட்டக்காரர்கள் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய கேட்டு கோஷங்கள் எழுப்பி வந்தனர் .

இந்த நிலையில் தக்கலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் குற்றவாளி பிடிக்க பல்வேறு பகுதிகளுக்கு தனிப்படையினர் சென்றிருப்பதாகவும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்
தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 200 க்கு மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.