• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி..,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு மேலிட பொறுப்பாளருமான சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது அமிர்ஷா கூறியதால்தான்.

அதிக தொகுதிகள் கேட்டு வாங்கி அமைச்சரவை ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடிப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாக பேட்டி,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு மேலிட பொறுப்பாளருமான ராஜேஷ் குமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இரவிலும் போராட்டம் தொடர்ந்ததை தொடர்ந்து செயல் அலுவலர் மற்றும் பேருராட்சி தலைவி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் குமார் பீகார் தோல்வி வேறு தமிழக களம் வேறு அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி அமைச்சரவை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வாங்குவோம் இதில் காங்கிரஸ் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை உறுதியாக இருக்கிறோம். அதற்கு காங்கிரஸ் மேலிட தலைவர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

தவெக கட்சியில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து,

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக பணியாற்றியவர்.மூத்த தலைவர் ,எட்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.

இவர் தவெக கட்சியில் இணைந்ததற்கு பாஜக -வின் அமித்ஷா தான் இதற்கு பின்னால் உள்ளார். அவர்கள் தான் அங்கு பொய், சேர வேண்டும் என்றும்.இதற்கு எதிரான ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் அவரை அனுப்பி இருக்கலாம்.ஆனால் எங்களை பொறுத்தவரையில் இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.எந்த சூழ்நிலையிலும் பாஜக போன்ற கட்சிகள்,பாசிச கட்சிகள் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும்,

பீகார் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கூட்டணியுடன் பாஜக வெற்றி பெற்று உள்ளது ஆனால் தமிழ்நாட்டில் இந்த மாதிரியான பகல் கனவு நடக்காது என்றும் தெரிவித்தார்.