• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் தேர்வுக்குழு கூட்டம்..,

Byமுகமதி

Mar 14, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி( வடக்கு) புதுக்கோட்டை கந்தர்வகோட்டை விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் தேர்வுக்குழு கூட்டம் 14.3.2026. சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ்(வடக்கு) கமிட்டியின் தேர்வுக் குழுவில் உள்ள District screening committee புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்ப ராஜ் வழக்கறிஞரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சந்திரசேகரன் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூர்யா பழனியப்பன் மாநகர தலைவர்கள் மதன் கண்ணன் பாருக் ஜெய்லானி ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஐந்து நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அன்னவாசல் சுப்பிரமணியன் குடுமியான்மலை தங்கவேல் மாவட்ட துணை தலைவர்கள் செம்பை மணி வேங்கை அருணாசலம் வாராப்பூர் ஜெய்சங்கர் ரெங்கராஜன் விராலிமலை வட்டார தலைவர்கள் ராஜசேகர் சட்டையப்பன் விராலிமலை நாகராஜன் பாலாஜி குன்றாண்டார்கோவில் வீசா. இ. வீஜி.சண்முகம் கறம்பக்குடி வீரையா தங்கசிவா சக்தி ரெங்கராஜன் தமிழ்ச் செல்வன் முகமது கனி ரபீக் கந்தர்வகோட்டை பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் துரைக்கண்ணன் மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ் குமார் தனபதிபசுபதி மகளிர் அணி மகாலட்சுமி உள்பட காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் விருப்பமனு அளித்தவர்கள் பங்கேற்றனர்.