• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர்கள் நியமனம்…

Byகாயத்ரி

Apr 11, 2022

அண்மையில் நடந்து முடிந்த உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை அடுத்து சோனியா காந்தி, மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமரீந்தர் சிங் பிரார் என்பவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டார். பரத் பூஷண் அஷுவ் என்பவர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான பிரதாப்சிங் பாஜ்வா மாநில சட்டப்பேரவை கட்சிக் குழுவின் புதிய தலைவராகவும், ராஜ்குமார் சப்பேவால் துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.