• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம் ..குவியும் வாழ்த்துக்கள்

ByA.Tamilselvan

Feb 28, 2023

டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகர் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தனது திறமையால் அவர் தற்போது உச்சம் தொட்டுள்ளார். காமெடி, குணச்சித்திர வேடங்கள் என்று கலக்கி வந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்தது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமா உலகில் இருக்கும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னை காரணமாக திரையில் தோன்றாமல் இருந்தார்.
! அதன்பின்னர் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் நாய் சேகர் வெளியானது. மேலும் மாமன்னன், சந்திரமுகி 2 என்ற நடித்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறையில் சாதனை படைத்திருக்கும் வடிவேலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், பொழுது போக்கு பிரிவின் கீழ் இந்த விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இதையடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.