கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க வில் இருந்து அ.தி.மு.க வுக்கு கட்சி மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அ.தி.மு.க பூத் கமிட்டி கூட்டம் கஸ்தூரிபாளையத்தில் நடைபெற்று உள்ளது.

இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என தி.மு.க வை சேர்ந்த பெரியநாயக்கன் பாளையம் நகர செயலாளரும் பேரூராட்சி தலைவருமான விஸ்வ பிரகாஷ் பாபுவிடம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது பாபு அது குறித்து தகவல் எதுவும் சொல்ல முடியாது. அது ரகசியம் என கூறியதால் தன்னிடம் இருந்த பாபு எதிர்க்கட்சியிடம் சேர்ந்ததும் அதே போல பூத் கமிட்டி மீட்டிங் என்ன பேசப்பட்டது என தன்னிடம் சொல்லவில்லை என ஆத்திரத்தில் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது.
அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் தி.மு.க விஷ்வபிரகாசிற்கு காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பாபுவின் வீட்டிற்கு சென்று தி.மு.க நிர்வாகிகள் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கூறப்படும் நிலையில், பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அ.தி.மு.க நகர செயலாளர் ரகுநாதன் அழைத்து சென்ற நிலையில் மருத்துவமனைக்கு சென்ற சில தி.மு.க நிர்வாகிகள் அவரையும் தாக்கி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்து நிர்வாகிகள் தாக்க பட்டத்தை கண்டித்து மேட்டுப்பாளையம் கோவை சாலையில் ஜோதி புரம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் தி.மு.க நிர்வாகி தாக்கப்பட்சதாக கூறி தி.மு.க வினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் தி.மு.க வினரை கண்டித்து போராட்டம் நடத்தபட்ட நிலையில், பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்த அ.தி.மு.க வினர் சட்டப்படி அ.தி.மு.க நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து உள்ளனர்.