புதுக்கோட்டை அருகே பசுமை நகர் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடம் இயங்கி வருகிறது.

இந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் ஒருத்தரப்பினராக ரங்கராஜன் மற்றொரு தரப்பினராக குணசேகரன் தரப்பாக செயல்பட்டு வருகிறது
இன் நிலையில் ரங்கராஜன் தரப்பினருக்கு மட்டும் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்த அனுமதி வழங்கியதால் குணசேகரன் தரப்பினர் கூட்ட அரங்கத்தின் இரும்பு கதவுகளை மூடி முற்றுகையிட்டனர்.

அப்போது காவல் துறையினரிடம் இந்த பிரச்சனை குறித்து புகார் கொடுத்தும் எப்படி கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது என போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதன் பிறகு இனிமேல் இக்கூட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்க மாட்டோம் என குணசேகரன் தரப்பினருக்கு உத்திரவாதம் அளித்ததால் இப்போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)