கோவை : இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் (ICMAI), தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாடு (NCMAC 2026) ஆனது கோவையில் ஜனவரி 9 – 11 தேதிகளில் நடக்கிறது.

NCMAC 2026, “RISE India – இந்தியாவையும் CMA உறுப்பினர்களையும் மறுநிலைப்படுத்தல், வளர்ச்சியை தீவிரப்படுத்தல், திறனை வலுப்படுத்தல் மற்றும் திறன்களை மேம்படுத்தல்” என்ற உட்கருத்தில் நடைபெறுகிறது. “விக்சித் பாரத் 2047” என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் அங்கமான: அடக்கவிலை போட்டித் திறனை வலுப்படுத்துதல், உற்பத்தித் திறனை உயர்த்தல், சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுமை நிலைத்தன்மை (ESG) மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துதல், தொழிற்புரட்சி 5.0, உலகளாவிய ஆலோசனை சூழல் மற்றும் உருவெடுக்கும் தொழில்நுட்பங்கள், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தரவு சார்ந்த முடிவெடுக்கும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் CMA உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். NCMAC 2026 மாநாட்டில் மத்திய- மாநிலப்பொதுத்துறை, தனியார் மற்றும் உயர்கல்வி நிறுமங்கள், உயரிய தணிக்கை-ஆலோசனை நிறுமங்களைச் சார்ந்த சாலச்சிறந்த வல்லுனர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.

NCMAC 2026 மாநாட்டில், தொழில்துறை கூட்டமைப்புகள், அரசு மற்றும் அரசு சாரா ஒழுங்குமுறை அமைப்புகள், நிதி நிறுவனங்கள், பிற தொழில்முறை அமைப்புகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நேரலையாக வழங்கப்படுகிறது. தொழில்முனைவு மனப்பாங்கு, வலுவான தொழில்துறை அடித்தளம் , புதுமை சார்ந்த சூழல் ஆகியவற்றில் புகழ்பெற்ற கோவையில் , சிறப்பு மிகு இம் மாநாடு நடைபெறுவது பெருமைமிக்க தருணமாகும்” என்று CMA TCA ஸ்ரீனிவாச பிரசாத், தலைவர், ICMAI, முதன்மை புரவலர், 63வது NCMAC 2026 தெரிவித்தார்.




