• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில்,

தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடாது காலதாமதம் செய்யும் ஒன்றிய மற்றும் கர்நாடகா அரசின் அணுகுமுறையை கண்டித்து,கண்டன கோசம் எழுப்பினர்.

தமிழகத்தை வஞ்சிக்கும் கபட நாடகம் ஆடுகிறது ஒன்றிய அரசு என்பதுடன், கர்நாடகா பாஜகவின் கபட நாடகத்திற்கு ஏற்ப தமிழக பாஜக செயல் படுகிறது என குற்றம் சாட்டினார்கள்.

தஞ்சையில் வாடும் நெற்பயிரை காப்பாற்றி விவசாயிகளின் நலன் காப்பாற்ற வேண்டும். தமிழக அரசு தமிழக விவசாயிகள் நலம் காக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்பினார்கள்.