• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வழியுறுத்தியும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்ட அஇஅதிமுக சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், விருதுநகர் மாவட்ட, மாநகர. ஒன்றிய , நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு, ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகளும், பிற அணி சார்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், பொதுமக்கள்