• Sun. Sep 8th, 2024

குமரி மாவட்டத்தை பாலைவனமாக்கும் சபாநாயகர் அப்பாவு.., தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு…

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் குமரி அதிமுக- வின் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் இணைந்து திமுக அரசு, உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் , சபாநாயகர் அப்பாவு, இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடத்திய கண்டன கூட்டத்தில் பங்கேற்றோர்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கடந்த 4_ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க திறக்கப்பட்டது என்றாலும், சானல்கள் முறையாக தூர்வாரததால், குமரியின் கடை, மடை நிலங்களுக்கு தண்ணீர் வராது.

இப்பகுதி விவசாயிகள் வேதனையில் இருக்கும் நிலையில்,

சபாநாயகர் அப்பாவு அவரது அதிகாரத்தை பயன்படுத்தி, ராதாபுரம் பகுதிக்கு தண்ணீரை திறந்து விட்டிருப்பதற்கு, மாவட்ட அமைச்சரும், அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது. குமரி மாவட்டத்தை பாலைவனமாக்கிவிடும்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42_அடி இருந்தால் ராதாபுரம் சானாலுக்கு தண்ணீரை திறக்கலாம். ஆனால் இன்றைய பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38_அடி மட்டுமே உள்ள நிலையில் குமரி மாவட்டத்து விவசாயிகளின் தேவையான தண்ணீரை அனுமதிக்காமல், சபாநாயகர் அப்பாவு அவரது அதிகாரத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீரை திறக்க செயதுள்ளது. நாஞ்சில் நாட்டை பாலைவனமாக்கும் முயற்சி.

குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. கொஞ்சம் எஞ்சியிருந்த சாலைகளும் அண்மையில் பெய்த மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சாலைகளை செப்பனிடும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

செந்தில் பாலாஜி எங்கள் ஆட்சிகாலத்தில் செய்த ஊழலில் தான் சிக்கியுள்ளார். செந்தில் பாலாஜியை இலக்காக இல்லாத அமைச்சராக தொடரக் கூடாது என தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *