• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய அரசை கண்டித்து – அல்வா கிண்டி கண்டன ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Sep 23, 2021

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து நூதன போராட்டம் மதுரை புதூர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தலைமையில், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜீயாவுதீன், வடக்கு மாவட்டசெயலாளர் கமால் பாஷா, துணைத் தலைவர் ஜபார்சுல்தான், , மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் ஏராளமானவர் கலந்து கொண்டு மத்திய ஒன்றிய அரசு பி.ஜே.பியை கண்டித்தும், கேஸ் விலை உயர்வை எதிர்க்கும் விதமாக கேஸ் உருளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியும், அல்வா கிண்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.