• Thu. Apr 24th, 2025

அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி‌ நிறைவு பாராட்டு விழா!

திண்டுக்கல்லில் கா. எல்லைப்பட்டி தலைமை ஆசிரியைக்கு ஊர் தலைவர்கள் மற்றும் பெரியவர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம்,கா. எல்லைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் ஜே.ஜாக்குலின் மேரி. 1965-ம் ஆண்டு பிறந்த இவர் 39 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

கா.எல்லைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறந்த பள்ளிக்கான விருது (2022-2023-ம்) ஆண்டு வழங்கினார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் வினாடி -வினா, வானவில் மன்றம், கலைத்திருவிழா போன்றவற்றில் மாவட்ட அளவில் இப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன்
தேசிய புத்தாக்க அறிவியல் விருது இரண்டு முறை மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளது.

மாநில அளவில் பங்கேற்பு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இரண்டு முறை மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் இப்பள்ளி பங்கேற்றுள்ளது. அத்துடன் தேசிய திறனறி தேர்வில் நான்கு மாணவர்கள் வெற்றி பெற்று கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.

இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 3 பேர் திண்டுக்கல் மாவட்ட மாதிரி பள்ளியில் பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். அத்துடன் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் , சுற்றுச்சுவர், தரைத்தளம் போன்ற வசதிகளைப் பெற்று தந்துள்ளார். அத்துடன் அரசின் மாணவர் நலத் திட்டங்கள், உதவித்தொகை, விலையில்லா பொருட்கள் பெற்று தந்தார்.

தலைமை ஆசிரியை ஜே.ஜாக்குலின் மேரிக்கு கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.