• Thu. Apr 24th, 2025

பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற போலந்து நாட்டு சுற்றுலா பயணிகள்..,

ByVasanth Siddharthan

Mar 23, 2025

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சந்தைக்கு வந்த போலந்து நாட்டு சுற்றுலா பயணிகள் சந்தையை ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தனர்.

போலந்து நாட்டிலிருந்து மதுரை, தேக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் வத்தலகுண்டு தினசரி சந்தைக்குள் இறங்கி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஜடாமுடி தரித்து ருத்ராட்சம் அணிந்து சிவ பக்தர் போல காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலந்து சுற்றுலா பயணிகள் சந்தையில் விற்கப்பட்ட பூஜை பொருட்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டினர்.

திடீரென வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் வத்தலக்குண்டு சந்தை கலை கட்டியது.