
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் வேடர் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் வயது (65) இவர் தனக்கன்குளத்தில் இருந்து வேடர் புளியங்குளம் செல்லும் சாலையில் தனக்கு சொந்தமான வீட்டில் மலர் (42) என்பவருக்கு வாடகைக்கு வீடு விட்டுள்ளார்.
மலரின் வீட்டுக்காரர் ஆஸ்திரேலியாவில் வேலையை பார்க்கிறார் என வீட்டு புரோக்கர்கள் மூலம் மலர் ரங்கராஜுக்கு அறிமுகமாகியுள்ளார். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மாதம் மாதம் வாடகை பணம் வந்துவிடும் என்றும் பிரச்சனை இருக்காது என்றும் ரங்கராஜ் அவர்களை குடியமர்த்தி உள்ளார். பின்னர் தான் தெரிந்தது வெளிநாட்டில் யாரும் வேலை செய்யவில்லை மலர் மற்றும் அவரது மகன் என இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்காத மலர் அக்கம்பக்கத்தினரிடமும் சகஜகமாக பழகுவதில்லை. வீட்டிற்குள் 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வருவதாகவும் நோய் பாதிக்கப்பட்டது போல் அந்த நாய்களின் உடல் மோசமான நிலைமையில் இருப்பதாகவும் மேலும் நாய்கள் யாரையும் உள்ளே விடாமல் கடிக்க வருவதாகவும் தெருவில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களையும் தொந்தரவு செய்வதாகவும் அக்கம் பக்கத்தினரும் வீட்டின் உரிமையாளர் ரங்கராஜன் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நான்கு ஐந்து மாதங்களாக வாடகை பணம் தராமல் இழுத்தடிப்பதாகவும் இது குறித்து வீட்டின் உரிமையாளர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் அளித்த போது தான் வீட்டை காலி செய்வதாக ஒப்புக்கொண்டு பின்னர் தற்போது வரை காலி செய்யாமலும் வீட்டிற்கு வாடகை பணம் கேட்டு ரங்கராஜ் சென்றால் நாயை விட்டு கடிக்க விடுவது போல் மிரட்டுவதாகவும் ரங்கராஜ் இன்று ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் விசாரித்த போது அவரையும் வீட்டிற்குள் வரவிடாமல் நானும் புகார் அளித்துள்ளேன்.
எனது வக்கீல் உடன் வருகிறேன் பேசிக் கொள்வோம் என்று முன்னுக்கு பின்னும் முரணாக பேசியதால் போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர். மேலும் இதே பெண் திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் வசித்து வந்த போது, அங்கேயும் இதே போல் நாய்களால் பிரச்சனை ஏற்பட்டு காவல் திருப்பரங்குன்றம் நிலையத்தில் புகார் இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
வாடகை பணம் கேட்டு வீட்டிற்கு சென்றால் வீட்டின் உரிமையாளரே ஒருமையில் பேசி நாயை விட்டு மிரட்டும் பெண்ணின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
