விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஆனந்த் இவர் மனைவி சாந்தி பொன் ஆனந்த் மற்றும் இவர் குடும்பத்தினர் இதை ஊர் சேர்ந்துவர்கள் இவர் அனைத்து உலக முக்குலத்தோர் ராணி வேலுநாச்சியார் முன்னேற்ற பேரவை என்று பேரவை நடத்தி வந்துள்ளனர் கடந்த 20 ஆண்டு காலமாக இந்த பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

கடந்த தைப்பொங்கல் அன்று இவர்களுக்கும் இவரு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பாக ஏற்பட்டுள்ளது. இது பிரச்சனை சம்பந்தமாக ஊர் நாட்டாமை பிச்சை என்பவரிடம் இவர்கள் புகார் அளித்ததாகவும் அதை தட்டிக் கேட்காமல் விட்டுவிட்டு சிலர் எங்கள் வீட்டில் பொருத்திருந்த சிசிடிவி கேமராவை உடைந்து இவர்களை தாக்கியதாக கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரையில் உள்ள ஐஜி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி புகார் அளித்துள்ளார் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது ஊரில் உள்ளவர்கள் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் இவர்கள் இவர்களுக்கு யாரும் கடையில் பொருட்கள் கொடுக்கக் கூடாது எனவும் கூறி வருவதை அடுத்து தற்போது நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் இவர்களிடம் தல கட்டு வரியும் வாங்காமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் .
இது குறித்து நாட்டாமை பிச்சை என்பவரிடம் கேட்ட பொழுது இவர்கள் ஊருக்கு எதிராகவும் தொடர்ந்து காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்து வருவதாகவும் ஆகையால் தான் அவர்களிடம் இருந்து கோவில் வரி வாங்கவில்லை என தெரிவித்தனர்.
பொன் ஆனந்த் கூறும் பொழுது ஊர் நாட்டாமை பிச்சையும் துணை நாட்டாமை பிரவேஷ் இருவரும் இந்த காலத்திலும் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வரி வாங்காமல் இருக்கிறார்கள். இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்களிடமும் மற்ற ஊர் பொது மக்களிடம் வசூல் செய்வது போல் எங்களுடன் வாங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.