• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Apr 29, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் புலித்தேவன்பட்டி ஊரணி பகுதியில் சுமார் 2 ஏக்கர் 47 சென்ட் நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே சாலை மறியலில் ஈடுபட்டு 18 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், 30 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மதுரை தேனி தேசிய நெடுச்சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், வட்டாச்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.