• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முப்படை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் (8) ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நஞ்சப்ப சத்திரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

இதில் லெப்டின் ஜென்ரல் வீரேந்திர வாட்சா மற்றும் ராணுவ அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர் அம்ரித் மாவட்ட எஸ்,பி ஆசிஷ்ராவத் மற்றும் காவல்துறையினர் கோட்டாச்சியர் பூஷணகுமார் வட்டாச்சியர் சிவக்குமார் வருவாய்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு பிபின் ராவத் மற்றும் இறந்தவர்கள் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்பு நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கம்பளி மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.