• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தளபதி 66 படத்தின் புகைப்படம் வைரல்

ByA.Tamilselvan

Jun 13, 2022

தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். பெயரிடப்படாமல் தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
குடும்ப பின்னணி படமாக உருவாகும் தளபதி 66 இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.