• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மதுரை தனக்கன்குளம் வழியாக திருமங்கலம் சென்ற கல்லூரி மாணவர்கள் பலத்த காயம், விபத்து குறித்து போலீசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Jan 18, 2024

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த விருமாண்டி (19) என்ற வாலிபர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது சக கல்லூரி மாணவர்களுடன் கல்லூரியை முடித்துவிட்டு மீண்டும் மதுரை திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

தொடர்ந்து., அதிக வேகதிறன் கொண்ட 200CC KTM RC பைக்கில் தனது நண்பர்கள் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு தனக்கன்குளம் திருமங்கலம் செல்லும் சாலையில் முன்னாள் சென்ற காரை முந்த நினைத்து அதிவேகமாக டூவீலரில் சென்றபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் மூவரும் படுகாயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் சாலையில் விழுந்து கிடப்பதை கண்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சாலையில் படுகாயங்களுடன் இருந்த நால்வரையும் மீட்டு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.