• Mon. Apr 29th, 2024

கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Byகுமார்

Mar 27, 2024

மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, ஆகியோர் தலைமையில் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களை கவரும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 வாக்குப்பதிவு 19.04.2024-அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் /மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த தேர்தல்களில் குறைந்த அளவில் வாக்கு சதவிகிதம் பதிவான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரித்திடும் நோக்கிலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, அனைத்து தரப்பு வாக்காளர்களையும் ஆர்வமுடன் வாக்களித்திட ஊக்குவிக்கும் வகையிலும் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ”செல்ஃபி போட்டோ பாயிண்ட்”, மாரத்தான் போட்டி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி, கலை நிகழ்ச்சிகள் என, பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில், மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, ஆகியோர் தலைமையில் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களை கவரும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ, மாணவியர்கள் நடனம், மைம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் ர.த.ஷாலினி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *