தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அனைத்துதுறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நியாய விலை கடைகளிலும் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர, துரித நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் அப் செயலி மூலம் தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க கடிதம் வாயிலாக ஆணையிட்டுள்ளார்.
