• Wed. Apr 23rd, 2025

சாலை மறியலில் ஈடுபட்ட தவெக வினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு..,

ByPrabhu Sekar

Apr 5, 2025

நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது,
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் தலைமையில் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் மின்னல் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை திரும்ப வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்கள் எழுப்பியவாறு ஜிஎஸ்டி சாலை நோக்கி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொழுது காவல்துறையினர் தடுப்பு உபகரணங்களை அமைத்து தடுத்தனர் இதனால் காவல்துறையினருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திடீரென மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு தடுப்புகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு சாலையில் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் தவெகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என பேசப்பட்டு வருகின்றது.