புதுக்கோட்டை மாவட்டம் மருதகோன் விடுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவிகள் அரசு சமூக நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர் விடுதி கல்லூரி அருகே உள்ளது.
இந்நிலையில் இன்று இரவு திடீரென்று மாவட்ட ஆட்சியர் அருணா சமூக நீதி மாணவியர் விடுதிக்குள் உள்ளே நுழைந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் விடுதி வார்டன் பணியில் இல்லாதது தெரியவந்தது மேலும் மாணவிகள் இடம் மதியம் என்ன சாப்பாடு வழங்கப்பட்டது இரவு என்ன சாப்பாடு என்று கேட்டனர். அதற்கு மாணவிகள மதியம் வழங்கிய சாப்பாட்டு மெனுவை கூறினார். உடனடியாக அங்கு ஒட்டப்பட்டிருந்த என்னென்ன கிழமைகளில் என்னென்ன சாப்பாடு வழங்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கையை பார்த்து மெனுவில் உள்ளது படி சாப்பாடு மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை என்பது ஆட்சியை கண்டுபிடித்தார்.
அங்கு இருந்த பணியாளர்களிடம் இது குறித்து கேட்டதற்கு அவர்கள் முறையாக பதில் கூறவில்லை.

உடனடியாக சமையலறைக்கு சென்று ஆட்சியர் அங்கு சோதனை செய்ததில் பல்வேறு குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த ஆட்சியர் சமையல் செய்யும் பணியாளரை கடிந்து கொண்டதோடு விடுதி வார்டன் நாளை காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என்று தொலைபேசியில் கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண இந்த மாணவியர் மாணவியர் விடுதி புதிதாக கட்டுவதற்கு அரசிடமிருந்து ரூபாய் 8 கோடி வந்துள்ளது மாணவியர் விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் விடுதி வாடன் மீது கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)