அக்.18ல் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையில் கலெக்டர், 3 அதிகாரிகள், 17 பேலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய் அலுவலர்கள், 17 போலீசார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உறவினர்கள் சட்டபூர்வ வாரிசுகளுக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.