• Fri. May 3rd, 2024

களியக்காவிளை நாகர்கோவிலில் செல்வபெருந்தகை கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30- லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை களியக்காவிளையில் பேச்சு..,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து களியக்காவிளையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை கலந்து கொண்டு பேசியதாவது :
18-வது மக்களவை தேர்தலில் ஜனநாயமாக, சர்வாதிகாரிமா என்ற தேர்தல் நடைபெறுகிறது. சர்வாதிகாரத்தை அழித்து ஜனநாயம் வெல்லவேண்டும் ,
இந்த தேர்தல் எதிர்கால தலைமுறையை காக்க நடைபெறும் தேர்தல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க நடைபெறும் தேர்தல், ஒரு அணி இந்திய நாட்டிற்க்கு விடுதலை வாங்கி கொடுத்த அணி மற்றது நாட்டிற்கு துரோகம் செய்த அணி ,
தேசத்திற்கு துரோகம் நடைபெறும் போதெல்லாம் கன்னியாகுமரி மாவட்டம் கைகொடுத்திருக்கிறது .

பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த மாவட்டம், இந்த தேர்தல் மக்களின் வரிப்பணத்தை எடுப்பவர்களுக்கும், மக்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான தேர்தல் 2014-ஆம் ஆண்டு திருச்சியில் மோடி கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், கள்ளபணம், வெளிநாட்டுபணத்தை மீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் 15-லட்சம் கொடுப்பதாக சொன்னார் செய்தாரா
ஏழைகள் 1000, 2000ரூபாய்களை கொடுத்து வங்கி கணக்குகளை துவங்கி பணத்திற்காக காத்திருந்தனர்.
ஆனால் அவர்கள் போட்டபணத்தை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று எடுத்து விட்டார்கள். இந்திய பொருளாதாரத்தை அமெரிக்காவிற்கு மேலாக கொண்டு செல்வதாக கூறி பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் கொண்டு சென்று அனைவரின் தலை மீது அதிக கடன் சுமையை ஏற்றியுள்ளார்.
ஜெயலிலதாக அம்மையார் மோடி கொண்டுவந்த திட்டங்களை கையெழுத்து போடவில்லை அப்படிபட்ட அம்மயாரை பாராட்டவேண்டும்,
மோடியின் முந்தைய தேர்தல் வாக்குறுதி குறித்து இங்கேயிருக்கும் அண்ணாமலை பதில் சொல்வாரா ? திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன உரிமை தொகை உட்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார் .


சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டதில்லை. 30-லட்சம் வேலை வாய்ப்பு ,5 0லட்சம் பெண்களுக்கு உரிமைதொகை உட்பட பல திட்டங்களுக்கும் பெண்களும் ,வேளாண்மைகளுக்கு நல்ல திட்டங்களை அறிவித்துள்ள ஆட்சி வேண்டுமா, வங்கியிலிருக்கும் மக்களின் பணங்களை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுத்து, மணிப்பூர் கொலைகள், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைகள் செய்ய காரணமாக இருந்த அரசு வேண்டுமா ,
காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தெடுத்த மண்ணான கன்னியாகுமரி மண்ணில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கூறினார். எனவே பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் விஜய் வசந்த் மற்றும் விளவங்குகோடு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் தாரகை காத்பர்ட் ஆகியோருக்கும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார். இந்த பரப்புரை கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் டாக்டர்.பினுலால் சிங் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *