• Mon. Jan 20th, 2025

பஞ்சலிங்கபுரத்தில் பா.ஜ.க ஓட்டு வேட்டை.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று பஞ்சலிங்கபுரம், சுண்டன்பரப்பு, மகாதானபுரம், மடத்துவிளை உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.கவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக துணைத் தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பா.ஜ.க., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் செந்தில், பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பா.ஜ.க தலைவர் மாடசாமி, ஓபிசி அணி ஒன்றிய செயலாளர் கணபதி, பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் பொன்னுலிங்கம், ரவி, இசக்கி முத்து, சங்கர், சுயம்புலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.