மே மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவை குற்றாலத்தில் சூழல் சுற்றுலாவிற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்து இருந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு மீண்டும் வனத் துறையினர் வாகனத்திற்கு செல்ல வரிசையில் காத்து இருந்தும், வனப் பகுதியில் சிறிது கிலோ மீட்டர் வனப் பகுதியில் நடந்து இயற்கை அழகு ரசித்து சென்று, குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
நீண்ட நாட்கள் மூடப்பட்டு இருந்ததாலும், நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தது குறிப்பிடத்தக்கது.