• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர்கள் சந்திப்பு..,

BySeenu

Jan 12, 2026

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7 பேருந்து நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. வெளியூர் செல்ல மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

பிக்பாக்கெட் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புதன் வியாழன், வார சந்தை போக்குவரத்து சரி செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளோம். 10 முக்கிய கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பதற்றமான 6 இடங்களை தேர்வு செய்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு அதிகரித்து உள்ளோம். சாலை ஓரங்களில் மது அருந்துவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சைபர் குற்றங்களை எங்கிருந்து நடக்கும் நிலை உள்ளது.

சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம். வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து தவறு செய்வார்கள்.

சைபர் குற்ற வழக்குகளில் அதிகம் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

RTO காசோலை ஒன்று வந்துள்ளது. முதியவர் வங்கி கணக்கில் இருந்த 17 இலட்சம் கொள்ளை அடித்து உள்ளனர்.. அவர்களை பிடிக்க தனிப்படை வெளி மாநிலம் புறப்பட்டது.

ஒரு வழக்கில் 10 பேரை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வருவது இதுவே முதல் முறை குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தனிப்படை போலீசாருக்கு பாராட்டு இது மாதிரியான சைபர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.. 350 கிரெடிட் கார்டு பிடிக்கப்பட்டு உள்ளது..

கடந்த ஆண்டில் 400 மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம். வரும் ஆண்டில் அதிகப்படியான நடவடிக்கை எடுப்போம்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தனிப்படை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். மிரட்டல் விடுபவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர் தான் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பிடித்து விடுவோம்

காவல்துறைக்கு பொங்கல், தீபாவளி கிடையாது.. அனைவரும் பணியில் உள்ளனர் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். முன்விரோதம் பகை தொடரும் கொலை சம்பவங்கள் குறித்து கண்காணித்து வருகிறோம்.

போதை தடுப்பு தனி பிரிவு உருவாக்க உள்ளோம். போதை நடமாட்டத்தை கண்டறிய வேண்டும்.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை கடந்த 8 தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளோம் வழக்கு தேவையான ஆதாரங்கள் இணைக்கப்பட்டது.

குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என இவ்வாறு கூறினார்..