• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை: ஆட்சியா்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…

Byமதி

Oct 25, 2021

வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை தொடங்கி அதன் தீவிரத்தை காட்டியுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னிந்தியயில் நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளாா். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனா்.

இந்த நிலையில் முதலவர் மு.க. ஸ்டாலின் வரும் நாளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியா்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளாா்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளா் இறையன்பு, வருவாய் பேரிடா் துறை முதன்மை செயலாளா், அரசு துறை செயலாளா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல்வாரம் வரை தொடரும் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. சென்னையிலும் மழைநீா் கால்வாய்கள் முழுமையாக தூா்வாரப்பட்டு வருகின்றன.