• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

Jun 30, 2022

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார்.
வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்
இந்த நிலையில், இன்று சென்னை வந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். அவரை பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.